சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் நத்தம் விஸ்வநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

DIN

அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் நத்தம் விஸ்வநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தைத் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தத் தடையில்லை என்றும், திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும், ஆனால், ஏற்கெனவே செயற்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானம் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கிற்கும் கோரிக்கைக்கும் வலுசேர்க்கும் வகையில், இதுபோல இபிஎஸ் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT