தமிழ்நாடு

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் கொள்ளை

DIN

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது. 

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று.

இந்தக் கோயிலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT