முகப்பு
தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் வழிபாடு

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக சாம்பல் புதன் வழிபாடு வேளாங்கண்ணி பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2022 at 11:29 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:03 PM

நாகப்பட்டினம்: கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக சாம்பல் புதன் வழிபாடு வேளாங்கண்ணி பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீப்பதற்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். 

Advertisement

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி காலை நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில்  ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு, அருட்தந்தைகள் நெற்றியில் சாம்பலை பூசினர். சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.