10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிடுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பருவத் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.