துறையூர் திமுக நகர செயலரும் 10-வது வார்டு உறுப்பினரான ந.முரளி பதவியேற்கிறார். 
தமிழ்நாடு

துறையூர் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு 

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 24  வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.

DIN

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 24-வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர். இந்நிகழ்வில் ரா. லலிதா, கி. நித்யா, ஜே. கார்த்திகேயன், கா. முத்துமாங்கனி, பெரியக்கா, ஹேமா, கெளதமி, மு. சுதாகர், த இளையராஜா, ந.முரளி, பாஸ்கரன், ம.பாபு, ச. செந்தில்குமார், புவனேஸ்வரி, சந்திரா, சுமதி, செல்வராணி, ஜானகிராமன், அ.பாலமுருகவேல், கா. தீனதயாளன், வீரமணிகண்டன், சரோஜா, கல்பனா, ந.திவ்யா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களாக உறுதிமொழி கூறி பதவியேற்றனர். 

பதவியேற்பில் பங்கேற்றோர்.

இவர்களுக்கு நகராட்சி மேலாளரும் பொறுப்பு ஆணையருமான ம. முருகராஜ் பதவி பிரமானம் செய்து வைத்தார். 

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றியக் குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் ஒன்றிய திமுக செயலர் இள. அண்ணாத்துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆர்.கே. தாண்டவமூர்த்தி, சுகாதார அலுவலர் ஆர். மூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!

முதல்முறையாக ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர்!

மோந்தா புயலுக்குப் பின்!

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT