பிஎம்டபிள்யூ கார் ஆலையில் 1,00,000-ஆவது கார் தயாரிப்பு 
தமிழ்நாடு

15வது ஆண்டு, பிஎம்டபிள்யூ கார் ஆலையில் 1,00,000-ஆவது கார் தயாரிப்பு

சென்னையில் அமைந்திருக்கும் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு, அதன் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், 1,00,000-ஆவது கார் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளத

IANS


சென்னை: சென்னையில் அமைந்திருக்கும் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு, அதன் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், 1,00,000-ஆவது கார் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.

எங்களது ஆலையிலிருந்து ஒரு லட்சமாவது கார் தயாரித்து மேட்-இன்-இந்தியா என்ற அடையாளத்தோடு வெளியே வந்துள்ளது. இந்த நாள், மிகவும் மகிழ்ச்சியான, பெருமைகொள்ளத்தக்கதாக இருக்கிறது. இது ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்புக்கும், திறமை மற்றும் ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றி.

இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பிஎம்டபிள்யூ அல்லது எம்ஐஎன்ஐ கார்கள், உலகின் வேறு எங்கும் இருக்கும் பிஎம்டபிள்யூ ஆலைகளில் தயாரிக்கப்படும் அதே சர்வதேச தரத்துடன் இருப்பதை சென்னை தொழிற்சாலை உறுதி செய்துள்ளது என்று அதன் மேலாண் இயக்குநர் தாமஸ் டோஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார் தொழிற்சாலை, 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

டபுள் ட்ரீட்... சைத்ரா அச்சார்!

லாரி ஓட்டுநரை தாக்கிய 5 போ் கைது

SCROLL FOR NEXT