மேயராக வெற்றி பெற்ற மகேஷுக்கு வாழ்தது தெரிவிக்கும் திமுக தொண்டர்கள் 
தமிழ்நாடு

நாகர்கோவில் மேயரானார் மகேஷ்

நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த ஆர்.மகேஷ்(57) 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

DIN

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த ஆர்.மகேஷ்(57) 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

52 வார்டுகள் கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 11 இடங்களிலும் 
அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளராக ஆர்.மகேஷ், பாஜகவின் சார்பில் நாகர்கோவில் நகராட்சியின் முன்னாள் தலைவி மீனா தேவ் போட்டியிட்டனர்.
இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.மகேஷ் 28 வாக்குகளும்
பாஜகவின் சார்பில் போட்டியிட்ட மீனா தேவ் 24 வாக்குகளும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் வெற்றி பெற்றதாக ஆணையர் ஆஷா அஜித் அறிவித்தார்.

மேயராக தேர்வு செய்யப்பட்ட மகேஷுக்கு. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என.சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT