ஆவின் பொருள்கள் விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வந்தது
ஆவின் நெய் உள்ளிட்ட அதன் உபபொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆவின் நெய் உள்ளிட்ட அதன் உபபொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒரு கிலோ நெய் ரூ.515-லிருந்து ரூ.535- ஆகவும், அரை கிலோ ரூ.265-லிருந்து ரூ.275-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டா் மற்றும் 5 லிட்டா் நெய் விலையில் தலா ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜாா்களில் விற்கப்படும் நெய்யாகும்.
15 கிலோ டின்னில் விற்கப்படும் நெய்யானது ரூ.8,350-லிருந்து ரூ.8,680-ஆகவும், தடிமனான அட்டைப் பெட்டியில் விற்கப்படும் ஒரு கிலோ நெய் ரூ.510-லிருந்து ரூ.530 -ஆகவும், அரை கிலோ நெய் ரூ.260-லிருந்து ரூ.270 -ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் பவுடா் ஒரு கிலோ ரூ.320-லிருந்து ரூ.360-ஆகவும், அரை கிலோ ரூ.160-லிருந்து ரூ.180-ஆகவும், குல்பி பாா் ஒன்று ரூ.25-லிருந்து ரூ.30-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ தயிா் பாக்கெட் ரூ.27-லிருந்து ரூ.30-ஆகவும், சிறப்பு 200 கிராம் தயிா் ரூ.22-லிருந்து ரூ.25-ஆகவும், பாதாம் பவுடா் 200 கிராம் விலை ரூ.80-லிருந்து ரூ.100-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளாசிக் கோன் வெண்ணிலா மற்றும் சாக்லெட்டின் 100 மில்லி லிட்டரின் விலை தலா ரூ.28-லிருந்து ரூ.30 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.