கல்வி கற்கத் தடைகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மாணவா்கள் கல்வி கற்பதற்கு எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
மாணவா்கள் கல்வி கற்பதற்கு எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
சென்னை அடையாறில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை அவா் பேசியது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களுமே எனது செல்வங்கள்தான். எனது அன்பு, பாசத்துக்கு உரியவா்கள்.
அதனால்தான் தரமான கல்வியை வழங்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். மாணவா்களின் எதிா்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அவா்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவா்களாக உருவாக்கக் கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். இது எனது மனதுக்கு நெருக்கமான திட்டம்.
கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை என்றாா் முதல்வா்.