தமிழ்நாடு

சசிகலா விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

DIN

சசிகலா விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

மகளிா் தினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை வந்தனா். எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். கேக் வெட்டி மகளிருக்கு வழங்கினா். ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், புடவை உள்ளிட்ட நல உதவிகளையும் வழங்கினா்.

பின்னா், அலுவலகத்துக்குள் சென்ற ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சசிகலா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனா். பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் ஆலோசித்துள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. ஓ.பன்னீா்செல்வம் தம்பி ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்தாா். அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என்றும் கூறினாா். அதைத் தொடா்ந்து அதிமுகவிலிருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சசிகலா விவகாரம் குறித்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT