தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

DIN

ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான (‘டெட்’) விண்ணப்பப் பதிவு இணைய வழியில் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு, ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தேர்வில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வில் இரண்டாம் தாளிலும், தேர்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை இரவு முதல் இணைய வழியில் தொடங்கியுள்ளது. தகுதியுடையவா்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியா் வாரிய இணையதள முகவரியில் வரும் ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 14-ஆம் தேதி முதல் இணையவழியில் சமா்ப்பிக்கலாம்.

தகுதித் தேர்வுக்கான இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோா் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியா் தகுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். தேர்வுகள் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT