தமிழ்நாடு

தங்கம் சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.39,248-க்கு விற்பனை

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.39,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.40,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.5,020-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.39,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து, ரூ.4,910-க்கு விற்பனையானது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,248 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.21 அதிகரித்து, ரூ.4,906-க்கு விற்பனையானது. 

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து, ரூ.70.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.70,200 ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT