தமிழ்நாடு

பேரறிவாளன் வீடு திரும்பினார்

DIN

புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

கடந்த மே 28-ஆம் தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார். மேலும், பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விடுதலைக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த நிலையில், பேரறிவாளனுக்கு புதன்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிணை வழங்கி உத்தரவிட்டனர். பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பரோலை ரத்து செய்ய வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் பிணை ஆணை உத்தரவு சிறைக்கு கிடைக்காத தகவலையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT