தமிழ்நாடு

அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது: அதிமுக கண்டனம்

DIN


சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக என்று அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

தனது தோல்விகளை மறைக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது திமுக.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் திமுக அரசு, மீண்டும் அவரை குறி வைத்தும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT