தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 16) வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

DIN

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 16) வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் புதன், வியாழன் (மாா்ச் 16,17) ஆகிய இரு நாள்கள் வட வானிலை நிலவும்.

மாா்ச் 18,19-இல் மழை: பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாா்ச் 18, 19-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை உயரும்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை வரை செல்ல வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT