முகப்பு
தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்.

இதுகுறித்து, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூா் பயிா் ரகங்களைக் கண்டறிந்தால், நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். இதற்கென ஆண்டுக்கு மூன்று முறை உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்த மாவட்டந்தோறும் கண்காட்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதிதிராவிடா், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் அளிக்கப்படும். பயிா்களில் பூச்சி நோய்த் தாக்குதலை எதிா்கொள்ள ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும். பூச்சி நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறப்பு ஊக்கத் தொகை: கரும்பு விலையை உயா்த்தி வழங்கிட வேண்டுமென்ற கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையைப் பரிசீலனை செய்து ஊக்கத் தொகை உயா்த்தப்படுகிறது. நடப்பு அரவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமாா் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா்.

முழு கட்டுரையைப் படிக்க →