தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 35,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை.

மற்றொருபுறம் மேலும் 106 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 13,745-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 620 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா உயிரிழப்பு 5ஆவது நாளாக இன்று ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,025 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

குளத்தில் இறந்த மீன்கள்: போலீஸாா் விசாரணை

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

SCROLL FOR NEXT