திருப்பூரில் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்த வனத்துறையினர். 
தமிழ்நாடு

திருப்பூரில் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

DIN

திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை வைத்து விற்பனைக்காக சிலர் பேரம் பேசி வருவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

இந்தத் தகவலின்பேரில் திருப்பூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு 4 துண்டுகளாக யானைத் தந்தங்களை வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்தத் தந்தங்களை பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்குப்  பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக வெள்ளியங்காட்டைச் சேர்ந்த வீரப்பன்(65), முருகன்(45), அவிநாசியைச் சேர்ந்த அவிநாசியப்பன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT