துரை வையாபுரி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

வைகோ மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு: பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல்

மதிமுகவில் கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு பொதுக்குழு அதிகாரம் அளித்துள்ளது.

DIN

மதிமுக தலைமைச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் வைகோ தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை மதிமுகவைச் சேர்ந்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட சில நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக தலைமைச் செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. 

மேலும், கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு பொதுக்குழு அதிகாரம் அளித்தது.

துரை வையாபுரி ஏற்கெனவே தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டபோது, மதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வைகோவின் இந்த முடிவால் மதிமுக அதிருப்தி நிர்வாகிகள் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT