தமிழ்நாடு

‘இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்’: முதல்வர் ஸ்டாலின்

DIN

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுக்காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாள்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர்கள் பதிலுரை வழங்கினார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

 “பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர்கள் சிறப்பாக தாக்கல் செய்தனர். வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என நம்புகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துகொண்டுள்ள செய்திகளை அறிந்தேன். இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்புகொண்டு இதை எப்படி கையாள வேண்டும் என சட்டரீதியாக கேட்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அவர்களூக்கு விரைவில் விடிவுக்காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தரும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT