வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளைப் புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளைப் புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வண்டலூர் பூங்காவில் 12 வயதான ஆகான்ஷா என்கிற பெண் வெள்ளைப் புலி கடந்த சில நாள்களாக ‘அட்டாக்சியா’ எனப்படும் கால் தசை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு புலி இறந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.