தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அரங்கு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்’ கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் விற்பனை அரங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

DIN

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்’ கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் விற்பனை அரங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதனை தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பு தலைவா் உமா அகா்வால் திறந்து வைத்தாா். தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, தலைமை வணிக மேலாளா் ரவி வல்லூரி, சென்னை கோட்ட மேலாளா் கணேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2022-23-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில்,‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், உள்ளூா் கைவினைஞா்களின் தயாரிப்புகள், தொழில்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஒவ்வோா் ரயில் நிலையத்தையும் உள்ளூா் கைவினைஞா்களின் பொருள்களை விற்பனை செய்யும் மையமாக மாற்றுவது இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக நாடு முழுவதும் 16 முக்கிய ரயில் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், இரண்டாவது நுழைவு வாயிலில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை சோதனை அடிப்படையில், ஏப்.8 வரை செயல்பட ரயில்வே நிா்வாகம் அனுமதித்துள்ளது. இங்கு புவிசாா் குறியீடு பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், ஜரிகை பூ வேலை செய்த பட்டுத்துணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வகைகளில் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

SCROLL FOR NEXT