ஸ்டாலின் குறித்து அவதூறு: அண்ணாமலைக்கு நோட்டீஸ் 
தமிழ்நாடு

ஸ்டாலின் குறித்து அவதூறு: அண்ணாமலைக்கு நோட்டீஸ்

முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

DIN


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் துபை பயணம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்றும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் துபை பயணத்தை அவர் கடுமையாக விமரிசித்துள்ளார் என்றும் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டினார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக செயல்பட்டு வரும் மு.க. ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துகளை பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரை அவதூறாக பேசியதைக் கண்டித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி எச்சரித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT