மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

நீட் விலக்கு: ’மோடி, அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன்’

நீட் விலக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

நீட் விலக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ''பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு மனநிறைவுடையதாக அமைந்தது.

பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களிடம் வைத்துள்ளேன். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். 

மீனவர்களின் மீன்பிடி உரிமை, கட்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன். 

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயில்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். 

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும். 

நரிக்குறவர்களை பட்டியலின, பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தேன். 

உள்துறை அமைச்சரிடம் நீட் பிரச்னை குறித்து அழுத்தமாக பதிவு செய்தேன். நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அவர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து வருவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிசாலையாக்கவும், சென்னை முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்கவும், நிலுவையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள்

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

SCROLL FOR NEXT