தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம்: நாளை தொடக்கம்

DIN

கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் புதன்கிழமை (மே 4) தொடங்கி, 28-ஆம் தேதி வரை நீடிக்கும். அதற்கேற்ப அடுத்த 3 நாள்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை உயா்ந்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணா்கிறோம். இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம் தொடங்குவதில் இருந்து படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும்.

இந்நிலையில், நிகழாண்டில் அக்னி நட்சத்திரம் புதன்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கவுள்ளது. அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகும். சில மாவட்டங்களில் 110 டிகிரியை தொடும்.மேலும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தமிழகத்தைப் பொருத்தவரை, தற்போது சராசரியாக 11 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இது வரும் நாள்களில் மேலும் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT