கோப்புப்படம் 
தமிழ்நாடு

வண்டலூரில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் காயம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பராமரிப்பாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பராமரிப்பாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நகுலன் என்ற ஆண் வெள்ளைப் புலி இருக்கின்றது. கடந்த சில நாள்களாகவே சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து, மருத்துவக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு வெள்ளைப் புலியை கூண்டில் அடைத்து கண்காணித்து வந்துள்ளனர். இன்று புலிக்கு பரிசோதனை செய்வதற்காக பராமரிப்பாளர் செல்லையா உதவியுடன் மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக பராமரிப்பாளர் செல்லையாவை வெள்ளைப் புலி தாக்கியுள்ளது. இதில், காயமடைந்த பராமரிப்பாளர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

வண்டலூர் பூங்காவில் பராமரிப்பாளரையே வெள்ளைப் புலி தாக்கியதால், பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண வேடிக்கை... அமைரா தஸ்தூர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு!

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு!

சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு எப்போது?

எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு! 1 லட்சம் டாலர் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? -அமெரிக்க அரசு விளக்கம்

SCROLL FOR NEXT