தமிழ்நாடு

'Chennai bus' செயலி அறிமுகம்! சென்னை மாநகரப் பேருந்துகளின் பயண விவரத்தை அறியலாம்

DIN

சென்னை மாநகரப் பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிந்துகொள்ள 'Chennai bus' என்ற செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று  'Chennai bus' என்ற இந்த செயலியை அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார். போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால்., இ.ஆ.ப., மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், சென்னை மாநகரப் பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை செல்போன் வழியாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், சென்னையைப் போன்று பிற பகுதிகளிலும் தானியங்கி கதவுகளுடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் வைக்கப்படும். 

பேருந்துகள் சரிவர இயங்காத பகுதிகள் குறித்து புகார் வரும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட பணிமனைகளுக்கு அதுகுறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT