அமைச்சர் அன்பில் மகேஷ் 
தமிழ்நாடு

‘மாணவர்கள் நாளைமுதல் பள்ளிக்கு வர தேவையில்லை’: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்றுமுதல் கத்திரி வெயில் தொடங்கப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே பள்ளியை முடிக்க கோரிக்கைகள் எழுந்தனர்.

தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், “வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நாளைமுதல் வழக்கமான வகுப்பிற்கு பள்ளிகளுக்கு வர தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள்களில் மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT