தமிழ்நாடு

பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை: முதல்வர் இன்று ஆலோசனை

DIN

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, இன்று தொடங்கியுள்ள கத்தரி வெயில், அடுத்த 25 நாள்களுக்கு தொடரவுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறையினர் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்ந்து, இன்று மாலைக்குள் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT