தமிழ்நாடு

மக்களை பலி கொடுத்து வீடுகளை அகற்ற வேண்டுமா? - ராமதாஸ் கேள்வி

DIN


சென்னை: மக்களை பலி கொடுத்து வீடுகளை அகற்ற வேண்டுமா என பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பான அவரது சுட்டுரை பக்க பதிவில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிா்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனா். அவா்கள் சென்னையின் பூா்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவா்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது!

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT