தமிழ்நாடு

இளையராஜா குறித்து அவதூறு: கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை:தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ்

DIN

திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கி.வீரமணி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் சென்னை பெருநகர காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா, ஒரு ஆங்கில புத்தகத்துக்கு எழுதிய அணிந்துரையில், பிரதமா் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதினாா். இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. சில அமைப்பினா் இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால் இளையராஜா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டாா்.

இந்த நிலையில், அண்மையில் ஈரோட்டில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இசையமைப்பாளா் இளையராஜா குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்து பேசியதாக புகாா் கூறப்பட்டது. இதற்கு தலித் இயக்கத்தினா், தலித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சென்னையைச் சோ்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனா் தலைவா் ஏா்போா்ட் த.மூா்த்தி, இது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாா் குறித்து விசாரணை செய்த தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT