தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்

DIN

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 ஆவது அலகு தவிர மற்ற நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, அனல் மின்நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து தொடா்ச்சியாக 5 அலகுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT