சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி பெளர்ணமி சிறப்பு பூஜை
தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பிறப்பு மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கம்பம்: தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பிறப்பு மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுருளி அருவி, சுருளிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் வைகாசி தமிழ் மாத பிறப்பு மற்றும் பெளர்ணமியை முன்னிட்டும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் மற்றும் பெளர்ணமி நாள் சிறப்பு பூஜையை கோயில் அர்ச்சகர் கணேஷ் திருமேனி செய்திருந்தார்.
Advertisement
Advertisement
நடைபெற்ற வைகாசி மாத மற்றும் பெளர்ணமி தின சிறப்பு பூஜைகளில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.