முகப்பு
தமிழ்நாடு

தொடர் மழை: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்துவரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்துவரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

நேற்று காலை வினாடிக்கு 7,661 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு  9,314 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 108.14
 யிலிருந்து 108.60 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9314 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.43டி.எம்.சியாக உள்ளது.

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. மழை அளவு 25.40 மிமீ-ஆக பதிவாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →