தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: மே 25 வரை அவகாசம் நீட்டிப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 25-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க மே 25-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சோ்க்கப்படுவாா்கள். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதன்படி, மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் வரை உள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே, இந்த அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசமானது மே 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பெற்றோா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெற்றோா் தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT