பட்டதாரி இளைஞர் தொடங்கிய கழுதைப் பண்ணை 
தமிழ்நாடு

பட்டதாரி இளைஞர் தொடங்கிய கழுதைப் பண்ணை!

பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

DIN

நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதைப்பால் பண்ணையை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம்  உள்ளதாகவும், நாட்டில் தற்போது 1 லடசத்து 40 ஆயிரம் கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே  உள்ளது. 

கழுதைப் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகவும், இந்த கழுதைப் பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுவதுடன், மனித எச்சில் உள்ள லைசை சைன் என்ற ரசாயனம் கழுதைப் பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.

தாய்ப்பாலுக்கு இணையான சக்தி கொண்ட இந்த கழுதைப் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதைப் பாலின் விலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT