கோவையில் அகழாய்வுக் கண்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர் 
தமிழ்நாடு

கோவையில் அகழாய்வுக் கண்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்

கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

DIN

கோவை: கோவை, வ.உ.சி. மைதானத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி, பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

கோவை, வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி மற்றும் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டலின் வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட அகழாய்வு பொருள்களின் மாதிரிகள், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.

இதில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, வெள்ளகோவில் சுவாமிநாதன், தங்கம் தென்னரசு, அன்பரசன், கயல்விழி செல்வராஜ், நீலகிரி எம்.பி.ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்காட்சியனை பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயா முன்னேற்றம்

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு! இதுவரை இல்லாத அதிகபட்சம்!

இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

காலிறுதியில் மோதும் சபலென்கா - வோண்ட்ருசோவா

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT