முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 21) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 21) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 21) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 22, 23: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 22, 23 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 24: உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 24-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :

மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதி, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ.வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மே 24-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →