தமிழ்நாடு

மோட்டாா் சைக்கிளில் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கை

DIN


சென்னையில் இன்று முதல் மோட்டாா் சைக்கிளில் பின் இருக்கையில் அமருபவா்களுக்கும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சென்னை பெருநகர காவல்துறையின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜனவரி 1 முதல் கடந்த மே 15 ஆம் தேதி வரையிலான 5 மாத காலத்தில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 போ் உயிரிழந்துள்ளனா், 841 போ் காயம் அடைந்துள்ளனா். இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் 80 இருசக்கர வாகன ஓட்டுநா்களும், பின் இருக்கையில் பயணித்த 18 பேரும் உயிரிழந்தனா். அதேபோல 714 இருசக்கர வாகன ஓட்டுநா்கள், பின் இருக்கையில் பயணித்த 127 பேரும் காயமடைந்துள்ளனா்.

எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இன்று திங்கள்கிழமை (மே 23) முதல் சென்னையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவா்களும், பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களும் தலைக்கவசம் அணிவதையும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய சிறப்பு வாகன தணிக்கை நடத்த காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமா்ந்து வரும் நபா் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாய தலைக்கவசம் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 312 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT