முகப்பு
தமிழ்நாடு

குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.          

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
கணேஷ் தாமோதரன்
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.           

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் புதன்கிழமை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.               

இத்தேர்வில் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரனும் திமுக சார்பில் வழக்குரைஞர் கே.பி. குமார் பாண்டியனும் போட்டியிட்டனர். தேர்தலில் அதிமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குமார் பாண்டியன் 3 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.