தமிழ்நாடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் பொன்முடி

DIN

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது. கடந்த ஆண்டு இருந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அண்மையில் புதிய கட்டணப் பட்டியல் வெளியான நிலையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வுக்குப் பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்பு கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பாலிடெக்னிக்கில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பாலிடெக்னிக்கில் சேருவதற்கான இணைய வழி பதிவு ஜூலை 1 முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT