தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை

DIN

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்க்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய  குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, குட்கா, புகையிலை, பான் மசாலா ஆகிய பொருள்களை தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கி வைப்பது குற்றமாகும். 

கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT