தமிழ்நாடு

பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61%-ஆக உயா்வு

DIN

பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில், கடந்த 3 மாதங்களில், அதிக நாள்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில், அவர் பேசியதாவது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட தொடர்ந்து முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதியினை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே, 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது, ஊதிய நிர்ணயம் பே-மேட்ரிக்ஸ்–ல் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. 

அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன், கொரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருமான இழப்பு மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும், பேருந்து பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருகை தந்தும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், நடவடிக்கை மேற்கொண்டால், தினம் தினம் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். 

அதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT