தமிழ்நாடு

கருணாநிதி சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட 5 கட்டளைகள்

ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன

DIN

ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 

இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த 5 கட்டளைகள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 
அவை பின்வருமாறு:
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்

* இந்தி திணிப்பை எதிர்ப்போம்

* ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்

* வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்

* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT