தமிழ்நாடு

பொழிச்சலூரில் பயங்கரம்: குடும்பத்தினரைக் கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை

சென்னையை அடுத்த பொழிச்சலூரில், தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரகாஷ் என்பவர், தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

DIN


சென்னை: சென்னையை அடுத்த பொழிச்சலூரில், தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரகாஷ் என்பவர், தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரகாஷ், நேற்று தனது திருமண நாளன்று, குடும்பத்தினரை கொன்ற பிறகு, தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததாலும், அவரது உறவினர்கள் செல்லிடப்பேசியில் அழைத்தபோது யாரும் எடுக்காததாலும் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த காவலர்கள், பிரகாஷ் மற்றும் அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து உடனடியாக உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்டமாக,  குடும்பத்தினருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பிரகாஷ், பிறகு மின் ரம்பத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு பிறகு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலைக்குப் பயன்படுத்திய மின் ரம்பத்தை கடந்த 19ஆம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஐ.டி. ஊழியரின் வீட்டில் காவல்துறை ஆணையர் ரவி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, ரூ.3.50 லட்சத்துக்கு பிரகாஷ் கடன்வாங்கியிருப்பதற்கான பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த கொலைகள் மற்றும் தற்கொலைக்குப் பின்னணியில் இருப்பது கடன் பிரச்னையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT