முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் சில இடங்களில் 2 நாள்களுக்கு மிதமான மழை

தமிழகத்தில் சில இடங்களில் புதன், வியாழன் (ஜூன்1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

தமிழகத்தில் சில இடங்களில் புதன், வியாழன் (ஜூன்1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது: தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்தாக்கம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் புதன், வியாழன் (ஜூன்1,2) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

ஜூன் 3,4: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாள்களுக்கு

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூா் தாலுகா அலுவலகத்தில் 100 மி.மீ., தேவாலாவில் 80 மி.மீ., திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 60 மி.மீ., தருமபுரி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையாா் எஸ்டேட், திருச்சி மாவட்டம் நந்தியாா், சிறுகமணியில் தலா 40 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூா், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கோயம்புத்தூா் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், திருப்பத்தூா் மாவட்டம்

நாட்றம்பள்ளி, திருச்சி டவுனில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →