தமிழ்நாடு

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு

DIN

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டுள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இரு ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு தலா 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT