திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.
திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.
பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில், பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில், வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக். 4 ஆம் தேதி முதல் ரயில்வே நிா்வாகம் ரூ. 20 ஆக உயா்த்தியது.
இந்த நடைமேடைக் கட்டண உயா்வு 2023 ஜனவரி 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.