தமிழ்நாடு

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28ம் தேதி முதல் தொடக்கம்!

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

DIN


பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பியுள்ளன.

எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு அக். 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் பொதுப்பிரிவில் 39,350 பேருக்கும், அரசுப்பள்ளி மாணவா்களில் 4,563 பேருக்கும் விரும்பிய கல்லூரிகள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2022-2-23 ஆம் ஆண்டிற்கான பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான 3 ஆவது சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும், வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT