தமிழ்நாடு

8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு!

பண்டிகை நாள்களையொட்டி, ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: பண்டிகை நாள்களையொட்டி, ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. 

பண்டிகை நாள்களையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 இல் இருந்து ரூ.20 ஆக உயத்தப்பட்டது. 

இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணத்தை ரூ.20 இல் இருந்து ரூ.10 ஆக குறைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமேடை கட்டணம் குறைப்பு வியாழக்கிழமை (நவ.3) முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT